மொழியும் சமூகமும்
மொழியும் சமூகமும்
டாக்டர்.எஸ்.குமார்.
குமரி மாவட்டத்தில் கடுவா ஆட்டம்.
டாக்டர்.எஸ்.குமார்.
குமரி மாவட்டத்தில் கடுவா ஆட்டம்.
மனிதனுக்கு இயல்பாகத் தோன்றுகின்ற உணர்வு கலை உணர்வு. கலை என்பது ஒரு வழி. அதன் மூலம் நிகழும் முக்கிய நிகழ்ச்சி, கொடுப்ப்த்ம்,கொள்வத்ம், அறிவிப்பதும் அறிவதுமாகும். ஒரு மனிதனின் உள்ளுறைவை மற்றொரு மனிதனின் உள்ளத்துக்குக் காட்டுவதும் கலை எனலாம். அது ஒருவனின் உண்மையான் பரிச்சயத்தை மற்றவனுக்குக் கொடுக்கும் தன்மை கொண்டது. ஒருவனின் மெளனச் செதியை இன்னொருவனுக்கு சுய துக்கங்களின் அனுபவத்தை மற்றொருவன் பெறும்படிச் செய்யும். பண்டைய நாளின் இயற்கையோடு இயைந்த வாழ்வினை நடத்திய மனிதன் பல கலைகளையும் உருவாக்கி மகிழ்ந்தான்.
ஆதியில் வேட்டையாடுதல் முதலிய மனிதத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஒத்திகையாக் அலல்து மாந்திரிகச் சடங்கு ஆசாரமாக் ஆடற் கலைகள் தோன்றின் என்பது மானிடவியலார் கருத்தாகும். அதுவே பிற்காலத்தில் மனமகிழ்ச்சியை முக்கிய நோக்கமாகக் கொண்டு மனித உணர்வுகளை வெளிக்காட்ட கலைகளை மனிதன் வடிகாலாக்கிக் கொண்டான். மக்களின் மன இயல்பு ஒன்றாக இருப்பினும் வாழ்க்கை சூழல் காலத்தாலும் இடத்தாலும் மாறுதலுல்லுகுள்ளாவதால் சிந்தனைகள் வேறாகி வாழ்க்கை முறை பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகிறது.இந்த மாற்றங்களுக்கு ஏற்ப அவர்களின் கலை அம்சங்களும் மாற்றம் கொள்ளும். கலைகளில் முழுமையானது ஆடற்கலை. மனிதன் கைகால்களை அசைக்கிறான். தாவுகிறாம்,குதிக்கிறான். துன்பமிகுதியாலும் கை கால்களை அசைக்கிறான். அலைகிறான், துடிக்கிறான்,இங்ஙனம் மனிதனின் துன்ப இன்ப உணர்வுகளை அவனுடைய வாழ்க்கைத் தேவைகளை உடலசைவுகளால் வெளிப்படுத்துகிறான்.
தொடரும் இச் செய்தி...........................




0 மறà¯à®®à¯à®´à®¿à®à®³à¯:
Post a Comment
<< à®®à¯à®à®ªà¯à®ªà¯